Tamil News
Home செய்திகள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாக வழங்குக

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாக வழங்குக

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பள கொடுப்பனவை 20 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வேண்டும் என முன்பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை (07)பாராளுமன்றத்தில் இடம் பெற்ற சிறுவர்கள் மகளிர் வலுவூட்டல்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இவ்வாறு கூறினார்.

நாட்டை ஆண்கள் ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். வீட்டு நிர்வாகத்தை பெண்கள் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மனைவியாகவோ தாயாகவோ இருக்கலாம். இன்று நாட்டில் சாதாரண சம்பளம் பெறும் ஒரு ஊழியர் வாழ்க்கை செலவு இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அதனை ஈடு செய்வதற்காக மக்கள் அவர்களின் உணவு வேளைகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பலர் இருவேளை உணவு அல்லது ஒரு சிலர் ஒருவேளை உணவை மாத்திரமே உட்கொள்கின்றனர்.

இன்று வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கும் நீரை பயன்படுத்துவதற்கும் அச்சப்படுகின்றன.ர் ஏனெனில் இவர்களின் இவற்றின் சேவை கட்டணம் ஆசியாவின் ஆச்சரியமாக மாறியுள்ளது.

இன்று குடும்பத்தில் மூத்த பிள்ளை ஏதேனும் ஒரு தொழிலை செய்தால் தான் அடுத்த பிள்ளை பாடசாலைக்கு அனுப்ப முடியும் என்ற நிலைமை காணப்படுகின்றது. கிராமத்திலே  பாடசாலைக்கு செல்லும் பிள்ளை காலையில் உணவாக வெறும் தேநீரை மாத்திரம் அறிந்து விட்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. இது ஒரு வகையில் சிறுவர் துன்புறுத்தல் ஆகும் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

அத்தோடு நாளைய தினம் பிள்ளையை பாடசாலைக்கு எப்படி அனுப்புவது எவ்வாறு உணவைத் தேடிக் கொள்வது என்று யோசித்து பல தாய்மார்கள் நோயாளிகளாக மாறி இருக்கிறார்கள் இவர்களின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றமும் வழங்கி இருக்கின்றது.

கடந்த ஆட்சிக்காலங்களில் ஆசியாவின் ஆச்சிரியம் என இலங்கையை விளம்பரப்படுத்தினார்கள். நாடு இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறவில்லை, மாறாக ஆட்சியாளர்களின் சொத்தாக மாறி இருக்கின்றது. வாழ்க்கைச் செலவு ஆச்சரியமாக மாறி இருக்கின்றது நீர் கட்டணம் மின்கட்டணம் எரிபொருள் விலை ஆச்சரியமாக மாறியிருக்கிறது இதுதான் இன்று ஆசியாவின் ஆச்சரியமாக காணப்படுகின்றது.

ஒரு குடும்பம் செழிப்பாகவும் புளிப்பாகவும் வாழ்வதற்கு நாட்டில் உள்ள மொத்த குடும்பமே பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிங்கள் அனுபவிக்க வேண்டிய நிலையை இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாளைய தலைவர்களாக இன்றைய சிறுவர்களை பாடசாலைகள் வலுப்படுத்தி தயார்படுத்துவதற்கு முன்பள்ளி ஆரம்ப இடமாக காணப்படுகின்றது. பல்வேறு கஷ்டங்களை இந்நிலையில் முன் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். பல தியாகங்களை செய்து தமது சேவையை முன்னெடுக்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. அவர்களுக்கு மாதாந்தம் 4000 வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. என்றாலும் ஒவ்வொரு மாதமும் அது வழங்கப்படுவதில்லை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே அந்த பணம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவு மிகவும் குறைவானதாகும். எனவே இந்த குறைந்தபட்சம் 20,000 ரூபாவாவது அதிகரிக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்று முன்பள்ளி ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ பயிற்சி நிறை பூர்த்தி செய்து கொள்வதற்கு திறந்த பல்கலைக்கழகங்களில் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் வலியுறுத்திக் கொள்கிறேன்.

அத்தோடு முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியர் சேவைகள் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மேலும் நாடு முழுவதும் இல்ல முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குவது குறித்தும் அமைச்சு கவனம் எடுக்க வேண்டும் என இம்ரான் கூறினார்.

 

Exit mobile version