Home செய்திகள் இலங்கைக்கு எதிராக செப்ரெம்பரில் மற்றொரு பிரேரணை வரும் – பிரித்தானிய துாதா் தெரிவிப்பு

இலங்கைக்கு எதிராக செப்ரெம்பரில் மற்றொரு பிரேரணை வரும் – பிரித்தானிய துாதா் தெரிவிப்பு

8 இலங்கைக்கு எதிராக செப்ரெம்பரில் மற்றொரு பிரேரணை வரும் - பிரித்தானிய துாதா் தெரிவிப்பு“இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதா இல்லையா என்பது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக்குழுவே முடிவு செய்ய வேண்டும். ஆனால் செப்டெம்பர் மாத அமர்வில் மற்றுமொரு பிரேரணை இலங்கை தொடர்பில் வரும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” என்று இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நோ்காணலிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டாா்.

இது தொடா்பில் அவா் மேலும் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டு இணை அனுசரணையாளர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை இலங்கை அரசின் இணக்கத்துடனான ஒரு தீர்மானமாக இருந்தது. எனவே நீண்டகால அடிப்படையில் நாம் இப்போது அந்த நிலைமையை மீண்டும் பெற விரும்புகிறோம். இலங்கையில் தேர்தல் வருடமாக இருப்பதால் அது மிகவும் கடினமானதென இப்போது மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் நீண்ட காலத்துக்கு நாம் அதனை முன்னெடுக்க முடியும். அதுவே முன்னோக்கிச் செல்ல மிகவும் பயனுள்ள வழியாகவுள்ளது” என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

”இங்குள்ள செய்தித்தாள்களைப் படித்தால், பிரேரணை, இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் கருத்துக்களைத் திணிப்பதாக இருப்பதாக வரைவிலக்கணப் படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறு கூறுவது நியாயமானதல்ல. காரணம் தீர்மானத்திலுள்ள அனைத்து விடயங்களும் இலங்கையில் விவாதிக்கப்படும் தலைப்புக்களாகும். நீங்கள் இலங்கையில் உள்ளவர்களுடன் பேசினால், வடக்குக்கு சென்றால், கிழக்குக்கு சென்றால் மக்கள் இது குறித்து விவாதிப்பதை காணலாம். எனவே மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கையில் நடக்கும் விவாதத்தை பிரதிபலிக்கிறது. மாறாக வெளியிலிருந்து சர்வதேச சமூகம் கருத்துக்களை திணிக்கவில்லை” என்றும் இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் வலியுறுத்தினாா்.

Exit mobile version