Tamil News
Home உலகச் செய்திகள் விண்வெளிக்கு மிருகத்தை அனுப்பியது ஈரான்

விண்வெளிக்கு மிருகத்தை அனுப்பியது ஈரான்

ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையில் ஈரான் விண்வெளிக்கு கடந்த புதன்கிழமை(6) மிருகத்தை அனுப்பியுள்ளது.

மேற்குலக நாடுகள் மனிதர்களை அனுப்புவது தொடர்பில் சிந்தித்து வருகையில் ஈரான் மிருகத்தை அனுப்பியுள்ளது. ஈரானினால் தயாரிக்கப்பட்ட ஏவுகணை செயற்கைக்கோளை 130 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதைக்கு எடுத்துச் சென்றிருந்தது. செயற்கைக்கோளின் எடை 500 கிலோ என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானினால் அனுப்பப்பட்ட செயற்கைகோள்களில் இது மிகவும் பெரியதாகும்.

எனினும் எந்த வகையான மருகத்தை விண்வெளிக்கு அனுப்பியது என்பது குறித்து ஈரான் தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை. செயற்கைகோளினை ஈரானின் விண்வெளி ஆய்வு மையமும், ஏவுகணையை ஈரானின் படைத்துறையும் வடிவமைத்ததாக கூறப்படுகின்றது.

விண்வெளிக்கு மிருகங்களை அனுப்புவது தொடர்பான ஆய்வுகளை 2000 ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஈhன் ஆரம்பித்திருந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் முயற்சி வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டில் இரண்டு குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி பின்னர் மீண்டும் திரும்ப பூமிக்கு கொண்டுவந்திருந்தது.

இதனிடையே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே தமது நீண்டகாலத் திட்டம் என ஈரானின் அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த செப்ரம்பர் மாதம் பூமியில் இருந்து 450 கி.மீ தொலைவில் தகவல்தொழில்நுட்ப செய்மதியை ஈரான் வெற்றிகரமாக ஏவியிருந்தது.

இந்த முயற்சிக்கு 2022 ஆம் ஆண்டு ரஸ்யா தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்தது.

Exit mobile version