Tamil News
Home செய்திகள் திடீர்ப் பொதுத் தேர்தல் இல்லை! ஆகஸ்ட் வரை பொறுத்திருக்க ஆலோசனை

திடீர்ப் பொதுத் தேர்தல் இல்லை! ஆகஸ்ட் வரை பொறுத்திருக்க ஆலோசனை

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்த வொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பஸில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசு என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளமையால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது சாத்தியமானதென்றும், ரணிலிடம் பஸில் தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

மேலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசு ஆலாலோசித்து வருவதாகவும் அறிய முடிந்தது.

Exit mobile version