Home செய்திகள் ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் அவர்களின் 22 முகங்கள் நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் நேற்று 1.2 வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த 22 கலைஞர்களை பறைசாற்றும் நேர்காணல் தொகுப்புக்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உயிர்த்துடிப்புடன் வாழவைக்கும் கலைநிலாக் கலாமன்றம் மற்றும் சுதந்திர ஆற்றுகை குழுவினரும் இணைந்து மண்வாசனை எனும் கலைநிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.

நூல் வெளியீட்டின் முதல் பிரதியினை நூலாசிரியர் நவரத்தினம் கபிலநாத்தின் தந்தை செ. நவரத்தினத்திற்கு பிரதம விருந்தினர்களால் வழங்கி வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையும் சிறப்பு விருந்தினர்களாக வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜனும் கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர் ச. இராசலிங்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்ற செயலாளர் செ.சபாநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா வடக்கு ஆசிரிய வள நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் ஆய்வுரையினையும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரன் அறிமுகவுரையினையும் நிகழ்த்தியிருந்தனர்.

இந்வ நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், உள்ளிட்ட பல பலபிரமுகர்களும் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC 2426 2 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

Exit mobile version