Tamil News
Home செய்திகள் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் ஆய்வறிக்கை நாளை மறுதினம் நீதிமன்றில்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் ஆய்வறிக்கை நாளை மறுதினம் நீதிமன்றில்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் 23 ஆம் திகதி நீதிமன்றில் எடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாயில் இனம்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினுடையது எனச் சந்தேகிக்கும் 40 மனித உடற்பாகங்கள், உடைகள் மற்றும் இலக்கத் தகடுகள் இதுவரை மீட்கப்பட்டன.

இந்த மனித எச்சங்கள் தொடர்பிலும், மேலும் எந்தளவு பிரதேசத்தில் எத்தனை உடல்கள் இருக்கலாம் என்பது தொடர்பிலும், மீட்கப்படும் உடல் பாகங்கள் எத்தனையாம் ஆண்டிற்கு உரியவை என்ற விடயம் சம்பந்தமாகவும் தொல்லியல் பேராசரியர் ராஜ் சோமதேவா ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இந்த ஆய்வின் அறிக்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாளை மறுதினம் 23 ஆம் திகதி மன்றின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Exit mobile version