Tamil News
Home செய்திகள் கிழக்கின் ஆளுநராக நஸீர் அஹமட்? ரணில் திட்டமிடுவதாக தகவல்

கிழக்கின் ஆளுநராக நஸீர் அஹமட்? ரணில் திட்டமிடுவதாக தகவல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹபீஸ் நசீர் அஹம்மட்டை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

இதற்கு வசதியாக கிழக்கின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநராக நியப்படவுள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

நசீர் அஹமட் 2012 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிழக்கு மாகாண சபைக்குள் நுழைந்தார். கிழக்கின் முதலமைச்சராக பதவிவகித்தார்.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் நுழைந்த அவர் மொட்டு அரசுடன் இணைந்து இராஜாங்க அமைச்சரானார். இதன் காரணமாக அவரது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கியது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவு தனக்குத் தேவை என்பதால் நசீர் அஹம்மட்டை கிழக்கின் ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகிறது.

Exit mobile version