Tamil News
Home செய்திகள் இலங்கை தொடர்பான இறுதி வரைவு ஜெனீவாவில் சமர்ப்பிப்பு – அலி சப்ரி எதிர்ப்பு

இலங்கை தொடர்பான இறுதி வரைவு ஜெனீவாவில் சமர்ப்பிப்பு – அலி சப்ரி எதிர்ப்பு

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான முக்கிய நாடுகள், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன.

30 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த வரைவை முன்வைத்துள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை அதனை எதிர்க்கும் என்றும் வரைவிலுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடு தொடர்பான 8 ஆவது சரத்துக்கு எதிராக செயற்பட்டு நிற்கும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version