Tamil News
Home உலகச் செய்திகள் ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா

ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா

பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்ரை ஜப்பானுக்கு மேலே வடகொரியா செலுத்தியுள்ளது.

இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பசிஃபிக் கடலில் விழுவதற்கு முன்பு 4,500 கிமீ (2800 மைல்) தூரம் பயணம் செய்தது. இதுவே இன்னொரு பாதையில் ஏவுகணை சென்றிருந்தால் அமெரிக்க தீவான குவாமை தாக்குவதற்கு அதுவே போதுமான தூரமாக இருந்திருக்கும் எனக்கூறப்படுகின்றது.

2017ஆம் ஆண்டுக்குப் பின் வட கொரியா ஜப்பானுக்கு மேலே செலுத்தும் முதலாவது ஏவுகணை இதுவாகும்.

இதன் காரணமாக பாதுகாப்பாக இருக்கும்படி தனது  குடிமக்களுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு எதிர்வினையாற்றியுள்ளன.

Exit mobile version