Home செய்திகள் மன்னாரில் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் அபகரிப்பு

மன்னாரில் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் அபகரிப்பு

IMG 20210705 124356 2 மன்னாரில் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் அபகரிப்பு

மன்னார் நறுவிலி குளம் கடற்கரைப் பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலங்களை வனவிலங்கு சரணாலயம் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மன்னார் நறுவிலி குளம் கடற்கரையிலிருந்து அச்சங்குளம் வரையான சிறு காட்டுப் பகுதிகள், பல வருடங்களாக அந்த கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாகவும் கால்நடைகளை அவ்விடங்களில் பட்டி அமைத்து கால்நடைகளைப் பராமரித்தும் வந்தனர்.

தற்போது கடந்த இரண்டு வருடங்களாக வன விலங்கு சரணாலயம் திணைக்களத்தினர் குறித்த பகுதிகளை வேலி அடைத்து கையகப்படுத்தி உள்ளார்கள்.

இதனால் பண்ணையாளர்கள் கால்நடைகளை பாதுகாக்கவும் பட்டிகளில் அடைத்து பராமரிக்கவும் முடியாத நிலையில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள்.

வனவள பிரிவினர் கையகப்படுத்தி உள்ள பகுதிக்குள் கால்நடைகள் சென்று விட்டால் வனவள பிரிவினர் கால்நடை உரிமையாளரை கைதுசெய்து நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து வருகின்றார்கள்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version