Tamil News
Home செய்திகள் குருந்தூர் விகாரை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பௌத்த மதகுருமார்கள் கருத்து

குருந்தூர் விகாரை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பௌத்த மதகுருமார்கள் கருத்து

தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் என பௌத்த  மதகுருமார்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version