Tamil News
Home செய்திகள் வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில நீக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, COVID – 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சிலவே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் COVID – 19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டமைக்கான அட்டையை இனிவரும் நாட்களில் சமர்ப்பிக்க தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தவிர, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய COVID – 19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை அறிக்கையையும் இனிவரும் நாட்களில் சமர்ப்பிக்க தேவையில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த நபரொருவர் நாட்டிற்குள் பிரவேசித்ததன் பின்னர் COVID – 19 தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், குறித்த நபர் தமது சொந்த செலவில் 07 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version