Home உலகச் செய்திகள் தாய்லாந்தில் மியான்மர் நாட்டவர்கள் கைது 

தாய்லாந்தில் மியான்மர் நாட்டவர்கள் கைது 

தாய்லாந்தில் மியான்மர் நாட்டவர்கள் கைது 

தாய்லாந்தில் மியான்மர் நாட்டவர்கள் கைது

மலேசியாவில் வேலை செய்யும் நோக்கத்துடன் தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 மியான்மரிகளை தாய்லாந்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களின் 32 பேர் பெண்கள்,29 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மியான்மரியும் தரகர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 3.5 லட்சம்  ரூபாய் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்தின் Kanchanaburi மாகாணத்தில் உள்ள இயற்கையான எல்லை பாதை வழியாக மியான்மரிலிருந்து தாய்லாந்துக்குள் நுழைந்ததாக விசாரணையின் போது மியான்மரிகள் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் நிலவும் வறுமையான சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து முறையான பயண ஆவணங்களின்றி வெளியேறும் மக்கள் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு வேலை தேடி செல்வது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

Exit mobile version