Home உலகச் செய்திகள் பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும், பெண்களும் ஒன்றாக செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு

பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும், பெண்களும் ஒன்றாக செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு

தலிபான்கள் தடை

பூங்காக்களுக்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாக  செல்ல தலிபான்கள் தடை

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். அதன்படி வாரத்தில் 4 நாட்கள் ஆண்களும், 3 நாட்கள் பெண்களும் பொழுதுபோக்கு பூங்காக்களில் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தங்களின் புதிய அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை என தலிபான்கள் வலியுறுத்தி வரும் அதே வேளையில், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பாலின பிரிவினை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். 6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version