Home செய்திகள் பிள்ளையானுக்கு மட்டும் எப்படி அனுமதி? கேள்வி எழுப்புகிறாா் அரியநேத்திரன்

பிள்ளையானுக்கு மட்டும் எப்படி அனுமதி? கேள்வி எழுப்புகிறாா் அரியநேத்திரன்

பிள்ளையானுக்கு மட்டும் எப்படி அனுமதி? கேள்வி எழுப்புகிறாா் அரியநேத்திரன்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பு என அரசாங்கம் கூறிவரும் வேளையில் பிள்ளையானின் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு விடுதலைப் புலிகள் என்ற பெயர் பிரதிசெய்ய முடிந்தது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 47வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்திலே இணைந்து கொண்டவர்கள் தான் இன்று அந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் அந்த கட்சியினுடைய பெயரை பிரதி செய்து கொண்டு அரசியல் செய்கின்றார். இப்போது நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறுவோமாக இருந்தால் அதனை தடை செய்யப்பட்ட இயக்கம் என கூறுகின்றார்கள்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எவ்வாறு இலங்கையிலே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக இருக்கின்றது என்கின்ற? அரசாங்கத்துடன் காட்டி கொடுத்து அல்லது அரசாங்கத்திற்கு சோரம் போய் அரசாங்கத்துக்கு சார்பாக எந்த பெயரும் வைக்கலாம்.

Exit mobile version