Home செய்திகள் பதக்கங்களை வென்று உலக கிண்ண போட்டிக்கு தெரிவாகியிருக்கும் Kickboxing வடக்கு வீர வீராங்கனைகள்

பதக்கங்களை வென்று உலக கிண்ண போட்டிக்கு தெரிவாகியிருக்கும் Kickboxing வடக்கு வீர வீராங்கனைகள்

Kickboxing வீரர்கள்

உலக கிண்ண போட்டிக்கு தெரிவாகியிருக்கும் Kickboxing வீரர்கள்

இந்தியாவின் காஷ்மிரில் இடம்பெறவுள்ள உலக கிண்ண Kickboxing பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டியில்  வவுனியா, கிளிநொச்சி [கிளி/மத்திய கல்லூரி மாணவி] மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த வீர வீராங்கனைகள் பதக்கங்களை வென்று உலக கிண்ண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். 

இம் மாதம் 27ஆம் திகதி இந்தியாவின் தமிழகத்தில் ஆரம்பமான போட்டிகள் 30 ஆம் திகதி  முடிவுற்றிருந்தது. இப்போட்டியில் Kickboxing  போட்டியில் 4 தங்கப்தக்கமும், 1 வெள்ளி பதக்கம் மல்யுத்தப் போட்டியில் 2 வெள்ளி பதக்கமும் பெற்று மொத்தமாக 7 பதங்கங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளனர்.

சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் mixboxing அமைப்பின் ஊடாக  வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீ.ஸ்ரீதர்சன், கு.கிருசாந்தன், ஜெயவர்த்தன இமேஷா, முல்லைத்தீவைச் சேர்ந்த யோ. நிதர்சனா மற்றும் வி.தர்சிகன் உள்ளிட்ட 7 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

குறித்த இப்போட்டியில் இலங்கை, இந்தியா, இத்தாலி போன்ற நாடுகள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் போட்டியில் தங்க பதக்கத்தினை பெற்ற வீர, வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை இந்தியாவில் இருந்து பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிய மிக்ஸ் பொக்சிங் சங்கத்தின் தலைவரும் பயிற்றுனருமாகிய செல்வரத்தினம் நந்தகுமார் பயிற்றுவிப்பில் அவரது  தலைமையில்  குறித்த மாணவர்கள் போட்டிக்கு சென்று  பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version