Home உலகச் செய்திகள் பாகிஸ்தான் வரலாற்றில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் வரலாற்றில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர் இம்ரான் கான்

அகற்றப்படும் முதலாவது பிரதமர்

ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த அமர்வை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட பிஎம்எல்-என் கட்சியின் அயாஸ் சாதிக், வாக்கெடுப்பு முடிவை அறிவித்தார்.

பிஎம்எல்-என் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் ஔரங்கசீப்பின் கூற்றுப்படி, சாதிக் அமர்வுக்கு தலைமை தாங்கியதால் வாக்களிக்க முடியவில்லை. இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் அதிருப்தி உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை.

இதன் மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும் முதலாவது பிரதமராகி யிருக்கிறார் இம்ரான் கான்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஏதுவாக நாடாளுமன்ற அமர்வு திங்கட்கிழமை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version