Home செய்திகள் தீவகத்தில் அமைக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா

தீவகத்தில் அமைக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா

சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனாசூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா: நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு பகுதிகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அந்த ருவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய இடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை சீனா அமைப்பதற்கான வேலைத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இந்தியா தனது கரிசனையை வெளியிட்டதுடன், தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டன. இந்த நிலையிலேயே சீனா இந்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

Exit mobile version