Home செய்திகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்

இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்

அத்து மீறிய இந்திய இழுவைப்படகுக்கு எதிராக போராட்டம்

அத்து மீறிய இந்திய இழுவைப்படகுக்கு எதிராக போராட்டம்: இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக ஒரு இலட்சம்  கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று முதல் மன்னார் நகர் பகுதியில் இடம்பெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.

குறித்த கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு கையளிக்கும் முகமாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்தனர்.

குறித்த நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கம் சமாச செயலாளர் என்.எம்.ஆலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பெனடிற் குரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் , முல்லைத்தீவு , யாழ்ப்பாண் மாவட்டங்களில் கையெழுத்து பெற்று எதிர்வரும் நான்காம் திகதி மனித உரிமை தினத்தில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version