Home உலகச் செய்திகள் பாலைவனத்தில் புதிய ஏவுகணை தளங்களை அமைப்பதாக  சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

பாலைவனத்தில் புதிய ஏவுகணை தளங்களை அமைப்பதாக  சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

la fg china military parade 20150128 பாலைவனத்தில் புதிய ஏவுகணை தளங்களை அமைப்பதாக  சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா தன் மேற்கு மாகாணத்தின் பாலைவனப் பகுதிகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை  கட்டமைத்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவுக்கு தன் ஆயுதங்களை மறைப்பது சிரமமாகிவிட்டது என  கூறியுள்ள அமெரிக்காவின் உள் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், சீனா தன் பல தசாப்த அணு ஆயுத கொள்கைகளில் இருந்து மாறுபட்டு நடப்பதாகத் தெரிகிறது எனவும்  விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்திகள், நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் என்பதையே காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து சீனா தன் அணு ஆயுத வலுவை அதிகரிப்பது கவலைக்குரியது என்றும், இது குறித்து உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version