Home செய்திகள் இராணுவத்தினர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது- ஆளுநர் அழைப்பை நிராகரித்த விக்னேஸ்வரன்

இராணுவத்தினர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது- ஆளுநர் அழைப்பை நிராகரித்த விக்னேஸ்வரன்

கூட்டத்தில் பங்கேற்க முடியாது

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ள நீர், சுற்றாடல், மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பில் பங்கேற்குமாறு ஆளுநர் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

மேலும் இராணுவத் தரப்பின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதால் என்னால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ஆளுநரின் செயலாளருக்கு நேற்று அனுப்பிவைத்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வடக்கில் பாரியளவில் இராணுவம் குவிக்கப்பட்டுளளமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வடமாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் மேலும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version