Tamil News
Home செய்திகள்  உணவுப் பாதுகாப்பு தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

 உணவுப் பாதுகாப்பு தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல்களை நடத்தி உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மறுசீரமைப்பு அவசர உதவித் திட்டம்” எனும் திட்டம் வறியவர்கள் மற்றும் பேரிடர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வளமான மற்றும் நெகிழ்ச்சியான ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஜப்பான் நிதியானது, திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

Exit mobile version