Tamil News
Home செய்திகள் உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியதாக தகவல்

உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியதாக தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 100 நாட்கள் எட்டிய நிலையில், உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி விட்டனர்.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாடு மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24-ம் திகதி தாக்குலை தொடங்கியது. தற்போது இந்த போர் 100 நாட்களை எட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சீர்குலைந்து ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனிலிருந்து மொத்தம் 68 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு உக்ரைன் மக்கள் தொகை 4 கோடியே 30 இலட்சமாக இருந்தது. தற்போது 3 கோடியே 70 இலட்சமாக குறைந்துள்ளது.

Exit mobile version