Tamil News
Home உலகச் செய்திகள் வேலை இழப்பு – அமெரிக்கா, இந்தியா கடும் பாதிப்பு

வேலை இழப்பு – அமெரிக்கா, இந்தியா கடும் பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய் காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக பெருமளவான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 33.5 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர். இது 14.5 விகிதமாகும். இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இழப்பாகும்.

இந்தியாவில் 122 மில்லியன் மக்கள் கடந்த ஏப்பிரல் மாதம் வேலையிழந்துள்ளனர் இது 27.1 விகிதம் என இந்தியன் பொருளாதார அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பாதிப்பு 4 மடங்கு அதிகமாகும். எனினும் இந்தியா தனது உத்தியோகபூர்வ விபரத்தை வெளியிடவில்லை.

அயர்லாந்தில் வேலைவாய்ப்பின்மை வீதம் 28.2 சதவீதமாகியுள்ளது.

ஜேர்மனியில் 10.1 மில்லியன் பேரும் பிரான்ஸி;ல் 11.3 மில்லியன் பேரும் இத்தாலியில் 7.7 மில்லியன் பேரும் ஸ்பெயின்ல் 3.4 மில்லியன் பெரும் வேலை இழந்துள்ளனர்.

Exit mobile version