Tamil News
Home உலகச் செய்திகள் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மிகப் பெரிய நட்சத்திரம்

விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மிகப் பெரிய நட்சத்திரம்

விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரோன் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் நியூட்ரோன் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியதாகத் தான் இருக்கும். அதனுடைய பரப்பளவு சிக்காக்கோ அல்லது அட்லான்டா போன்ற சிறுநகரின் பரப்பளவேயாகும்.

விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல தோன்றும். ஆனால் அவை அடர்த்தியாகத்தான் இருக்கும். சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரோன் நட்சத்திரம் பூமியை விடவும் 3 இலட்சத்து 33 ஆயிரம் மடங்கு நிறையுடையதாகும்.

இது சூரியனைவிட 2.3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4,600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. வெஸ்ட் வேர்ஜினியாவில் கிறீன் பேங்க் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version