Tamil News
Home செய்திகள் வலி கிழக்கு தவிசாளருக்கு எதிராகவும் நீதிமன்ற தடை உத்தர பெற நடவடிக்கை

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிராகவும் நீதிமன்ற தடை உத்தர பெற நடவடிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று நாடவுள்ளதாக அறிய முடிகின்றது.

அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டம்இ வாகனத்தொடரணி என்பவற்றினை கொரோனா மற்றும் சட்டவிரோத கூட்டம் எனக் குற்றஞ்சாட்டி அவ் அவ் பொலிஸ் பிரிவுகளுக்குள் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைவடிக்கை 106(1) இன் கீழ் தடையுத்தரவுகள் பெறப்பட்டு வரும் நிலையில் கோப்பாய் பொலிஸாரும் வழக்கொன்றை யாழ் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.

Exit mobile version