Tamil News
Home செய்திகள் வரவு – செலவுத்திட்ட இலக்கை எட்ட இம்முறையும் இலங்கை தவறும் – ஆய்வு அறிக்கை

வரவு – செலவுத்திட்ட இலக்கை எட்ட இம்முறையும் இலங்கை தவறும் – ஆய்வு அறிக்கை

2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33 ஆவது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு – செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட ‘2024 வரவு – செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்’ எதிர்பார்க்கப்படுகிறது.

‘வரவு – செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளம் ஒன்றில் வெளியிடப்படுகிறது.

இலங்கையின் வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் பொருளாதார மதிப்பீடுகளின் வலுவான பகுப்பாய்வு மற்றும் புறநிலை மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது.

அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவால்வெளியிடப்படும் வரவு – செலவுத் திட்ட அறிக்கையின் நோக்கத்தையே இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது.

இந்த இரண்டு அறிக்கைகளும் வரவு – செலவுத்திட்டம் பற்றிய புரிதலையும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியிலும் நாடாளுமன்றத்திலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

வெரிட்டே ரிசேர்ச்சின் ‘வரவு – செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் அரசாங்கத்தின் கணிப்புகளை விடவும் வரவு – செலவுத் திட்டவிளைவுகள் தொடர்பாக மிகவும் துல்லியமான கணிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது.

இது இலங்கையில் தொழில்சார் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான மேலதிக உள்ளீட்டை உருவாக்குகிற தகவல்களை வழங்கின்றது.

Exit mobile version