Tamil News
Home செய்திகள் ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிக்கொண்டு வரப்படவேண்டும் – ஐ.நா. பிரதிநிதி

ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிக்கொண்டு வரப்படவேண்டும் – ஐ.நா. பிரதிநிதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்கொணர முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொது மக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 290 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடத்து ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று வரை நீதி கோரி காத்திருக்கின்றனர்.

இந்தநிலையிலே, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கான பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் இலங்கை தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக மார்க் – ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு முன்னேற வேண்டுமானால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மார்க் – ஆண்ட்ரே பிராஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான முந்தைய விசாரணைகளின் முழுமையான விபரங்களை வெளிப்படுத்தவும், சுயாதீன விசாரணையை முன்னெடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version