Home செய்திகள் மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை? 

மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை? 

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் இன்று காலை களவிஐயம் ஒன்றினை மேற்கொண்டு கல்லாறு நீலாவனை பகுதியில் உள்ள நிலமைகளை அவதானித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது அக்காலத்தில் மட்டக்களப்பு நிர்வாகமாவட்டம் பரந்துபட்டு கானப்பட்டமையின் காரணமாகவே மாவட்டத்தின் நிர்வாகத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

மாவட்டங்களின் எல்லைகளை பார்வையிட்ட இரு குழுக்களும் எல்லை வரைபடங்களின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

வர்த்தமானியில் 1987ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விசேட அறிவித்தலின் எல்லை நிர்ணயத்திற்கு அமைவாக நில அளவை படங்களில் பொருந்தாமல் உள்ளமை அவதானிக்கப்பட்டது.

DSC 0599 மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை? 
அத்தோடு கல்முனை நகரசபையின் குப்பைகள் மட்டக்களப்பு கல்லாறு எல்லை வீதியூடாக எடுத்துச்செல்லப்படும் போது வீதிகளில் குப்பைகள் சிதறிக் கானப்படுவதும் அவதானிக்கப்பட்டு பொதுமக்கள் முறைப்பாசெய்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் தனது அரசாங்க அதிபருடனும் அது தொடர்பான குழுவினருடனும் கலந்துரையாடி தங்களின் தீர்மானத்தினை மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், எல்லைகளை அவதானித்து நடவடிக்கை எடுப்பதற்காக சென்ற குழுவில், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஐகதீசன் அத்தோடு மட்டக்களப்பு அம்பாறை நிலஅளவை திணைக்களத்தின் நிலஅளவை அத்தியட்சகர்கள் உள்ளுராட்சி ஆணையாளர், பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா மற்றும் துறைசார் நிபுனர்களும் கலந்துகொண்டனர்.
Exit mobile version