Tamil News
Home உலகச் செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை – மியான்மரில் இராணுவம் எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை – மியான்மரில் இராணுவம் எச்சரிக்கை

மியான்மரில் இராணுவ அட்சிக்கு எதிராகப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மக்களுக்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை ஏற்க மறுத்த இராணுவம் இராணுவ ஆட்சியை நிறுவியுள்ளது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபிடாவ், யனக்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version