Tamil News
Home செய்திகள் பிராந்தியத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை தடுக்க உதவுமாறு மாலைதீவிடம் ஜனாதிபதி கோரிக்கை

பிராந்தியத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை தடுக்க உதவுமாறு மாலைதீவிடம் ஜனாதிபதி கோரிக்கை

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை கோரியுள்ளார்.

Exit mobile version