Tamil News
Home செய்திகள் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் இருண்ட யுகத்தையே ஏற்படுத்தும் – கஜேந்திரகுமாா்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் இருண்ட யுகத்தையே ஏற்படுத்தும் – கஜேந்திரகுமாா்

“நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (இணையவழி பாதுகாப்புச் சட்ட மூலம்) அரசால் அவசரமாகக் கொண்டு வரப்பட்டதற்கு காரணம் என்ன? இந்தச் சட்டமூலம் இருண்ட யுகத்தையே உருவாக்கும். ஆனால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் தொடர்பாக நிலையியல் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில்இ இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்தக் குழு அந்த மாற்றங்களைச்சரியாக ஆய்வு செய்து அது தொடர்பாக ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அந்த அறிக்கை நாடாளுமன்றத்துககுச் சமர்ப்பிக்கப்படுகின்ற வரைக்கும் அந்தச் சட்டமூலம் தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அறிக்கை என்னும் பெயரில் நாடாளுமன்றத்துக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆவணம் அறிக்கை அல்ல என்றும், அந்த அறிக்கை ஜனவரி 23ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட அறிக்கை இது வரைக்கும் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படாத நிலையில்தான் இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வரப்போகும் உண்மையான சட்டத்தில் இருக்கப்போகும் விடயங்கள் எல்லாமே மூடி மறைக்கப்பட்டு ஒரு இருண்ட நிலையில்தான் இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது” என்றும் கஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.

Exit mobile version