Tamil News
Home செய்திகள் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌபீக் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் இம் மாதம் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 9ம் மாதம் 26ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்

குறித்த வழக்கில் 60ஆண்களும் 4 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version