Tamil News
Home செய்திகள் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் கைது – வரலாறுகளை அழிக்கும் முயற்சி?

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் கைது – வரலாறுகளை அழிக்கும் முயற்சி?

கிளிநொச்சி, மண்டைக்கல்லாறு பகுதியில், 28/07 அன்று புதையல் அகழ்வில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தென்னிலங்கை அவிசாவளை மற்றும் பாதுக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 29, 34, 35, 47, 48 வயதையுடையவர்கள் என்றும் இனங்காணப்பட்டுள்ளது.

இதனிடையே வடபகுதியில் புதையல்களை தேடுவது என்ற போர்வையில் செயற்படும் சிங்கள இனத்தவர்கள் தமிழ் மக்களின் வரலாற்று சின்னங்களை திருடுவது மற்றும் அழிப்பதன் மூலம் தமிழ்மக்களின் தொன்மையான மரபுகளை மறைக்க முற்பட்டு வருகின்றனர். இதற்கு சிறீலங்கா அரசும் படையினரும் உதவி வருகின்றனர். வடபகுதி கடலில் சிங்கள மீனவர்களை அனுமதித்து தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை திருடும் சிங்கள தேசம் தமிழ் மக்களின் மரபுச் சின்னங்களையும் அழிக்க முற்பட்டு வருகின்றது.

Exit mobile version