Tamil News
Home செய்திகள் தலைமைப் பதவி மறுக்கப்பட்டாமல் தனியாகக் களமிறங்க சஜித் ஆலோசனை

தலைமைப் பதவி மறுக்கப்பட்டாமல் தனியாகக் களமிறங்க சஜித் ஆலோசனை

ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பான தெளிவாக முடிவு எடுக்கப்படாவிட்டால், தனி அணியாகத் தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகளையும் சஜித் பிரேமதாஸ செய்து வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுடன், சிறுபான்மையின கட்சிகளுடன் கூட்டாகத் தேர்தலில் களமிறங்க அவர் வியூகம் வகுத்து வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.தே.கவின் பின்வரிசை எம.பிக்கள் முழுமையாக சஜித்தை ஆதரிக்கிறார்கள். தற்போது ஐ.தே.க தரப்பில் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மிகப்பெரும்பாலானவர்கள் சஜித் அணியுடனேயே இருக்கிறார்கள்.

தனது ஆதரவு எம்.பிக்களுடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிμக் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவற்றையும் இணைத்து கூட்டணியாகக் களமிறங்கும் பேச்சுக்களில் சஜித் தரப்பு இறங்கியுள்ளது.

கட்சி தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால், ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கமாட்டேன் என சஜித் உறுதியாக அறிவித்து விட்டார். எனினும், அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்காமல் தட்டிக்கழிப்பதில் ரணில் தரப்பு தொடர்ந்து ஈடுபடுவதால் சஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Exit mobile version