Tamil News
Home செய்திகள் சகல அரசியல் கைதிகளும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் – கஜேந்திரன் எம்.பி. கோரிக்கை

சகல அரசியல் கைதிகளும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் – கஜேந்திரன் எம்.பி. கோரிக்கை

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ.ஆனந்தவர்ணன் எனப்படும் அரவிந்தனை நேற்றுப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபாதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கொழும்பு பயங்கரவாத
விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அன்றைய தினமே கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வெலிக்கடையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முகநூலில் கடந்த 2020 இல் ஒரு படமும் 2022 இல் ஒருபடமும் பகிரப்பட்டன எனவும், அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்ய அவர் முயற்சிக்கின்றார் எனவும் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைத் தடுத்துவைத்துள்ளனர். ஏற்கனவே அவர் சுமார் 9 ஆண்டுகள் கொடிய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் பல பொய் வழக்குகளுக்கும் முகம் கொடுத்து விடுதலையாகி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்lhh;.

அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ள சிறையில் ஆனந்தவர்ணன் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறைச்சாலையில் அவரைச் சந்தித்து உரையாடியிருந்தேன். சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையில் உள்ள படத்தை முகநூலில் பகிர்ந்ததாகக் குற்றம் சுமத்தி அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி தன்னைக் கைது செய்து அடைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் அடுத்த தடவை எப்போது நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என்ற திகதி கூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். தன்னைக் கைது செய்து அடைத்துள்ளமையால் தனது பிள்ளைகள் அநாதரவான நிலையில் இருக்கின்றனர் எனவும், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மிகுந்த வேதனையுடன் அவர் கோரினார்” என்றும் கஜேந்திரன் தெரிவித்தாா்.

Exit mobile version