Home செய்திகள் தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க பொதுக் கட்டமைப்பு – வவுனியா கூட்டத்தில் தீா்மானம்

தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க பொதுக் கட்டமைப்பு – வவுனியா கூட்டத்தில் தீா்மானம்

WhatsApp Image 2024 04 30 at 4.42.03 PM தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க பொதுக் கட்டமைப்பு - வவுனியா கூட்டத்தில் தீா்மானம்ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று வவுனியாவில் கூடிய பொது அமைப்புக்களால் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர் என இந்தக் கூட்டத்தின் பின்னா் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3. அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4. அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5. தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.

இந்தத் தீா்மானத்துக்கு நாற்பதுக்கும் அதிகமான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசியல், சமூக செயற்பாட்டாளா்களும் கையொப்பமிட்டுள்ளாா்கள்.

Exit mobile version