Tamil News
Home உலகச் செய்திகள் கோவிட்-19 – ஈராக்கில் இருந்து வெளியேறுகின்றது பிரான்ஸ் இராணுவம்

கோவிட்-19 – ஈராக்கில் இருந்து வெளியேறுகின்றது பிரான்ஸ் இராணுவம்

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக ஈராக்கில் உள்ள தனது படையினரை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க படையினர் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் நாட்டுப் படையினர் ஈராக்கில் இருந்து வெளியேறவுள்ளனர். ஈராக் படையினருக்கான பயிற்சி நடவடிக்கை என்ற போர்வையில் தங்கியுள்ள 200 படையினரையும் வெறியேற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

போர் மற்றும் இராஜதந்திரப் பேச்சுக்கள் மூலம் வெளியேற்ற முடியாத மேற்குலக படையினரை வைரஸ் வெளியேற்றியுள்ளதாக ஈராக் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version