Tamil News
Home செய்திகள் கொரோனா தொற்று – நாளாந்தம் 200 பேர் பாதிப்பு

கொரோனா தொற்று – நாளாந்தம் 200 பேர் பாதிப்பு

இலங்கையில் கடந்த காலங்களில் நாளாந்தம் 800 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 200 பேர் மட்டுமே  நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படுகின்றார்கள்  என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில்   மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணைக்கையை குறைப்பதானது வேண்டுமென்றே தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், நாட்டில் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் தொடர்வதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அன்டிஜென் சோதனைகளை நடத்தப் போவதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Exit mobile version