Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா அச்சம்: பல மாதங்களுக்கு பிறகு மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையம் திறப்பு

கொரோனா அச்சம்: பல மாதங்களுக்கு பிறகு மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையம் திறப்பு

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட சுகாதார அச்சம் காரணமாக மூடப்பட்ட அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது.

அதே சமயம், கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வெளிநாட்டு பயணிகள் மெல்பேர்ன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

டிசம்பர் 7ம் திகதி கணக்குப்படி, விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 160 வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒருவருக்கு 2231 அமெரிக்க டாலர்கள் செலவாகும். 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 3718 டாலர்கள் செல்வாகும் எனக் கூறப்படுகின்றது.

Exit mobile version