Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனாவுக்கு பலியான எஸ்வதினி நாட்டு பிரதமர்

கொரோனாவுக்கு பலியான எஸ்வதினி நாட்டு பிரதமர்

எஸ்வதினி நாட்டு பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  அம்ப்ரோஸ் லாமினி திடீரென உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆபிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி நாட்டையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு, ஸ்வாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டது. கொரோனா தாக்கத்தால் 6,700 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அந்நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினியும் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், அவரது உடல்நிலை சீராகவும், எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில்  டிசம்பர் 1ஆம் திகதி தென் ஆப்ரிக்காவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அவரது உடல்நிலை சீராகக் காணப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று (டிச.,13) பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி (வயது 52) உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் துணைப் பிரதமர் தெம்பா மசுகு உறுதிப்படுத்தியுள்ளார்

Exit mobile version