Tamil News
Home செய்திகள் உலகப் பொருளாதாரத்திற்கு ‘2023’ கடினமான காலம்-IMF கருத்து

உலகப் பொருளாதாரத்திற்கு ‘2023’ கடினமான காலம்-IMF கருத்து

2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது என  அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா  தெரிவித்துள்ளார்.

 மேலும், 2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம்.

கடந்த வாரம் நான் சீனா சென்றிருந்தேன். அங்கே கரோனா தொற்றே இல்லாத பபுள் ஜோனுக்கு சென்றேன். ஆனால் பயணத் தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்தபின்னர் தொற்று பரவலைத் தடுக்க முடியாது. அடுத்த 2 மாதங்கள் சீனாவுக்கு மிகவும் கடினமான காலம். சீனப் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம். அந்த எதிர்மறை விளைவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.

ஆனால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்க்கும் சூழலே இருக்கிறது. காரணம் அங்கு தொழிலாளர் சக்தி இன்னும் வலுவாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Exit mobile version