Tamil News
Home செய்திகள் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம் இறுதி நேரத்தில் ரத்தாகலாம்? விமல் வீரவன்ச

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம் இறுதி நேரத்தில் ரத்தாகலாம்? விமல் வீரவன்ச

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசிநேரத்தில் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்கத் தூதரகமும்தான் இந்த நாட்டை ஆள்கின்றன.

எனவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்கு ஈரான் ஜனாதிபதி இலங்கை வரவுள்ள நிலையில், அதற்கு அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பிலேயே விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 ‘உமாஓயா’ திட்டத்துக்கு ஈரான் உதவியுள்ளது. ஒரு நாட்டின் அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவி வழங்கினால் அதன் திறப்பு விழாவில் குறித்த நாட்டின் தலைவருக்கு பங்கேற்க உரிமை உள்ளது.

எனவே, நீங்கள் கூறுவதுபோல் அமெ ரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தால் பயணம் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version