Tamil News
Home உலகச் செய்திகள் இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

டிசம்பர் 22ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் இந்திய,இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து 5 முறை நடந்துள்ளன.

இமேஸ்வரம், சென்னை மற்றும் இலங்கை தலைநர் கொழும்பிலும் இரு நாட்டு அரச அதிகாரிகள் ஏற்பாட்டில், 5 முறை நடந்த பேச்சுவார்த்தையில், இருநாட்டு மீனவர்களுக்கிடையே சுமூக முடிவு ஏற்படாததால் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், சமீபகாலங்களாக தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும் படகுகள் சேதப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன.

இதையடுத்து வரும் டிசம்பர் 22ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் மீண்டும் இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

Exit mobile version