Tamil News
Home உலகச் செய்திகள் மாடர்னா நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து பெறுவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம்

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து பெறுவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம்

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ்க  கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க  அமெரிக்கா ஒப்பந்தம்  செய்துள்ளது.

 “மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளோம் என அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்துகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,அமெரிக்காவில் இதுவரை 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version