Tamil News
Home செய்திகள் இலங்கை வந்த ஜோ்மனியின் ஆய்வுக் கப்பல் – சீற்றத்தில் சீனா

இலங்கை வந்த ஜோ்மனியின் ஆய்வுக் கப்பல் – சீற்றத்தில் சீனா

வெளிநாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் எரிபொருள் மீள்நிரப்புதலில் ஈடுபடுவதற்கு இலங்கை அனுமதி வழங்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியமை குறித்து சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சிகளில் ஈடுபடும் கப்பல்களுக்கே இலங்கை தடைவிதித்துள்ளது – ஆராய்ச்சி கப்பல்கள் மீள்நிரப்புதலில் ஈடுபடுவதற்கு இலங்கை தடை விதிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக்க கதிருகமுவ தெரிவித்தார். ஜேர்மனியின் ஆராய்ச்சிக் கப்பல் எரிபொருள் மீள் நிரப்புவதற்கே கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. அதனால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

14 மாதங்களில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு தடவை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்ட கடும் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஒரு வருட காலத்திற்கு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது.

எனினும் இந்தத் தடையை அறிவித்தவேளை அரசாங்கம் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் எரிபொருள் மீள்நிரப்புதலிற்கு அனுமதி வழங்கப்படுமா என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போதே மீள்நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்படும் என்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

Exit mobile version