Home செய்திகள் இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்

9 2 இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை - புனரமைப்பையும் ஆரம்பித்தனா்ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version