Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியா தயாரித்த மலிவு விலை புற்றுநோய் தடுப்பு மருந்து

இந்தியா தயாரித்த மலிவு விலை புற்றுநோய் தடுப்பு மருந்து

பக்க விளைவுகளைக் குறைத்து மீண்டும் மீண்டும் புற்றுநோய் வருவதை தடுக்கும் மருந்தை இந்தியாவின் டாடா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தள்ளனர்.

பல பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தற்போதைய மருந்துகளுடன் ஒப்பிடும்போது பக்கவிளைவுகளை 50 விகிதம் குறைக்கக்கூடியது.

‘R+Cu’ எனப்படும் இந்த புதிய மருந்து புற்றுநோய்களைத் தடுக்கும் oxygen radicals எனப்படும் மூலக்கூறுகளை கொண்டுள்ளது. இது புதிய புற்றுநொய்க் கலம்கள் உருவாகுவதை தடுக்கும் சக்தி கொண்டது. மேலும் புற்நோயக் கலம்கள் உடலின் ஒரு பகுதியில் இரந்து மறு பகுதிக்கு பரவுவதையும் தடுக்கும்.

கணையம், சுவாசப்பை மற்றும் வாய் புற்றுநோய்களுக்கு இந்த மருந்து சிறந்த சிகிச்சையை வழங்கும்.

100 ரூபாய்கள் பெறுமதியான இந்த மருந்து புற்றுநோய்க்கான மிகவும் மலிவான சிகிச்சை முறையாக கருதப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த மருந்து சந்தைப்படுத்தப்படவுள்ளது.

பக்கவிளைவுகள் தொடர்பில் மனிதர்களிலும் எலிகளிலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவை வெற்றியளித்துள்ளன. ஆனால் புற்றுநோய்களை குணப்படுத்தும் பரிசோதனைகள் இதுவரையில் எலிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களில் அவை மேற்கொள்ளப்பட்டு தகவல்களை சேகரிப்பதற்கு 5 வருடங்கள் எடுக்கும் என இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கலாநிதி ராஜேந்திரா பட்வே தெரிவித்துள்ளார்.

Exit mobile version