Tamil News
Home செய்திகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளர்கள் பாதிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளர்கள் பாதிப்பு

 இலங்கையில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய கடன்உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டஇரு மருந்துகளே நோயாளிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டே இந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் குறித்து ஆராய சுகாதாரஅமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது.சுகாதார சேவைபணிப்பாளர் நாயகம் இதற்கு தலைமைதாங்குவார்.

மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நஸ்ட ஈட்டினை பெறுவது குறித்து குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள்இஅந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணி;ற்கு இந்த மருந்தினை கொடுத்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

குடலிறக்க சத்திரகிசிச்சைக்காக மயக்கமருந்தினை கொடுத்தவேளை அவர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version