Tamil News
Home செய்திகள் “இந்தாண்டு மாத்திரம் இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது-எஸ். ஜெய்சங்கர்

“இந்தாண்டு மாத்திரம் இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது-எஸ். ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ‘இந்தோ-பசிபிக் பற்றிய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றிய பின்னர் தொடர்ச்சியான கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இந்தாண்டு மாத்திரம் இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் கடன்கள் மற்றும் இடமாற்று ஏற்பாடுகள் அடங்கும். சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு நாம் செய்யும் எந்தவொரு உதவியையும் நாம் இயல்பாகவே செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு “மிகவும் கடினமான கட்டத்தை” கடந்து வருவதாகவும், இரு அண்டை நாடுகளும் கைகோர்க்க முடியாவிட்டால் ஆசிய நூற்றாண்டு நடக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர வேண்டுமானால், அதற்கு பல காரணங்கள் உள்ளன என நான் நினைக்கிறேன், இலங்கை மாத்திரம் அவசியம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version